Breaking News

தமிழக அரசு தடை உத்தரவை மீறி விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம்

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை ஒட்டை பிள்ளையார் என்கிற வரசித்தி விநாயகர் கோவில் 28-ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம், தமிழக அரசு தடை உத்தரவை மீறி நகர தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த விநாயகர் ஊர்வலம் மங்கலம்பேட்டை நகரத்தின் முக்கிய விதிகள் வழியாக எடுத்துச் சென்றனர். சிவன் கோயில் அருகில் வரும்போது போலீசாருக்கும் இந்து முன்னணி நிர்வாகிகளுக்கும்  தள்ளுமுள்ளு  ஏற்பட்டது.

இதையடுத்து, காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்...

மேலும் போலீசாருக்கும் இந்துமுன்னணி நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையும் மீறி இந்து முன்னணியினர் ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலையை ஏரியில் கலைத்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில்,  மாவட்ட செயலாளர் மணிகண்டன் வெங்கடேசன் ஒன்றிய தலைவர் ராஜ் ஒன்றிய செயலாளர்கள் மாணிக்கம்முருகன் குணசேகரன் ரவி சங்கர் தட்சிணாமூர்த்தி கோவிந்தன் ஜெயராமன் யோகேந்திரன் ராஜசேகர் விக்கி செந்தில் நமச்சிவாயம் சக்திவேல் விக்கி  சுந்தர் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments