கழிவுநீர் ஓடையால் நோய்த்தொற்றுபாதிப்பு... கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வாத்தியார்விளை, ஜஸ்டஸ் தெரு, அருகு விளை போன்ற பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கழிவுநீர் ஓடை சரி செய்யப்படாததால் ஏராளமானோர் நோய்த்தொற்றால் பாதிப்பு எற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
நாகர்கோவில் பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியாத நிலையில் மாநகராட்சியை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் நிறுவன தலைவர் தினகரன் தலைமையில் அப்பகுதி பெண்கள், இயக்க நிறுவாகிகள் உட்பட பலர் வடசேரி அம்பேத்கர் சிலை முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments