இந்திய ராணுவ போக்குவரத்துக்கு 16 விமானங்கள் கொள்முதல் செய்ய அரசு முடிவு
புதுடெல்லி, செப்.9-
இந்திய ராணுவ போக்குவரத்துக்கு உதவ ஸ்பெயின் நாட்டு இடம் இருந்து சி 295 நடுத்தர வகை போக்குவரத்து விமானங்களை நிலைக்கு ஸ்பெயின் நாட்டிடம் இருந்து விலைக்கு வாங்குவதற்கு அமைச்சரவை புதன்கிழமை அன்று ஒப்புதல் தந்தது.
இந்திய ராணுவ போக்குவரத்து தேவைகளுக்கு ஏழு ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விமானங்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இந்திய ராணுவத்துக்காக கொள்முதல் செய்யப் பட்டவை ஆகும்.
60 ஆண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஆவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக புதிய சி 295 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை. இந்த விமானங்கள் 5 முதல் 10 டன் எடையினை ஏற்றிக்கொண்டு பறந்து செல்லும் திறன் உடையவை.
முதலில் 16 விமானங்களை இந்திய ராணுவத்துக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாப்பத்தி எட்டு மாதங்களில் இந்த விமானங்களை இந்தியாவுக்கு பறக்கும் நிலையில் வழங்குவதற்கு ஸ்பெயின் நாட்டு ஏர் டிஃபென்ஸ் மற்றும் ஸ்பேஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த 16 விமானங்களுக்கு விலையாக 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டி இருக்கும். விமானப் படையின் போக்குவரத்து தேவைகளுக்கு மேலும் தேவைப்படும் விமானங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள ஸ்பெயின் ஏர்பஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் நிறுவனம் சி 295 நடுத்தர ரக போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்கின்றது.
இந்தியாவில் டாட்டா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து ஸ்பெயின் நாட்டு கம்பெனி 40 சி 295 போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்யும்.
10 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்று இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments