Breaking News

காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு

விருத்தாசலம்:

கொரொனா  மூன்றாவது அலை அதிகமாக பரவி வரும் காரணமாக அதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மற்றும் உயர் நீதிமன்றம் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு தடை விதித்துள்ளது.

இந்த அரசாணையை  பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்  ஆணைக்கிணங்க விருத்தாசலம் காவல் துணை கண்காணிப்பாளர் மோகன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் விஜயரங்கன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ஆதி விருத்தாசலம் பகுதி முக்கிய வீதிகளில் ஆட்டோ ரிக்ஷா மூலம் ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

No comments

Thank you for your comments