Breaking News

அரசு தலைமை மருத்துவமனையில் தீ விபத்து..!!

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமார் 3000 பேர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் உள்நோயாளியாக சுமார் 1200 பேர் தினந்தோறும் அனுமதிக்கப்படுகின்றனர். 

இந்நிலையில் அவர்களுக்கு நவீன சிகிச்சை அளிக்கும் வகையில் புதிய கட்டிடத்தில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மிஷின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.  இதன் காரணமாக நோயாளிகள் தனியார் ஆய்வகங்களை தவிர்த்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலேயே எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்து வந்தனர்

இன்னிலையில் இன்று மாலை எம்.ஆர்.ஐ ஸ்கேன் ஆய்வகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவமனை அவசர சிகிச்சை நோயாளிகள் பிரிவு உட்புறம் முழுவதும் கடுமையான புகை மூட்டம் சூழ்ந்தது.

தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது ஆனால் தீ கட்டுக்கடங்காமல் புகைமூட்டம் மளமளவென மருத்துவமனை வளாகம் முழுவதும் பரவியது.

இதனையடுத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்றொரு கட்டிடத்திற்கு நோயாளிகளை மாற்றும் பணி மேற்கொண்டனர்.

மேலும் தீயை அணைக்க முடியாத காரணத்தினால் லாரிகளில் மணலை கொண்டு வந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரத்தை போராடி மருத்துவமனைக்கு வெளியே கொண்டுவந்து தீயை அணைத்து  கட்டுப்படுத்தினர். 

இந்த எம்.ஆர்.ஐ ஸ்கேன் இயந்திரத்தின் விலை சுமார் 2 கோடியே 40 லட்சம் என முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

எம்.ஆர்.ஐ.ஸ்கேன் இயந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானதால் கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அனைவரும் வெளியேறி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மக்கள் பீதி அடைந்தனர்...

No comments

Thank you for your comments