Breaking News

இலவச கண் சிகிச்சை முகாம்

 விருத்தாசலம்:

விருத்தாசலம் லயன்ஸ் சங்கம்,   விருத்தாசலம் ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி, கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம்  நடைப்பெற்றது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் லயன்ஸ் சங்கம்,  விருத்தாசலம் ஸ்ரீ ஜெயின் ஜுவல்லரி, கோயம்புத்தூர் சங்கரா கண் மருத்துவமனை  கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும்  இலவச கண் சிகிச்சை முகாம்  விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அறுவை சிகிச்சை, மருந்து, லென்ஸ் ( IOL ) கண்ணாடி, போக்குவரத்து, படுக்கை வசதி அனைத்தும் இலவசம் வழங்கப்படுகிறது இந்த மருத்துவ முகாமை ஜெயின் ஜுவல்லரி உரிமையாளராக மாநாட்டு நடைமுறைகள் மாவட்டத் தலைவர் அகர்சந்த் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் 

இதில் விருத்தாசலம் லைன் சங்க தலைவர் சிவகுருநாதன், தலைமை தாங்கினார்  முன்னாள் துணை ஆளுநர் சிவகுமார், இரண்டாம் நிலை துணை ஆளுநர் கோபிகிருஷ்ணா, வட்டார தலைவர் செல்வகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன், மாவட்ட தலைவர் கண் சிகிச்சை முகாம் பாஸ்கரன், மாவட்ட தலைவர் ஆலயம் விருத்தாசலம் செல்வராஜ், மாவட்ட தலைவர் சிடம்பரம் விஜயகுமார் தலடா, மாவட்டத் தலைவர் மனித உரிமை சங்கம் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் பழனியப்பன், ச சாலை கனகதாரா, மாவட்டத் தலைவர் சண்முகம், நெய்வேலி மாவட்டத் தலைவர் பாலு, பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மருத்துவர் கேசவன், தலைமையாசிரியர் வினோத்குமார், செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

No comments

Thank you for your comments