வடசேரியில் நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர்
குமரி:
குமரி மாவட்டம், பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் லட்சத்திற்கு மேற்பட்ட இடத்தில் கொண்டப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகர் வடக்கு பகுதி சார்பில் வடசேரியில் நடைப்பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.இராதகிருஷ்ணன் வணங்கி வழிப்பட்டார்.
பின்னர செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
பிரதமர் மோடியே உலகின் மூத்த மொழி தமிழ் என்று பெருமைப்பட சொல்லி இருக்கிறார். ஏன் தமிழை பெருமைப்பட பேசிய ஒரே இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி, சாதாரணமாக ஒரு முறை சொல்லிவிடவில்லை இன்னும் சொல்லப்போனால் சமஸ்கிருதத்திற்கும் மூத்த மொழியான தமிழ் மொழி என்று சொல்லியிருக்கிறார். இதை ஏன் நாம் கொண்டாடவில்லை,
என்றைக்கு பிரதமர் தமிழை பற்றி பேசி அறிவித்தாரோ அதை தமிழக அரசும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என தனது கோரிக்கையாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments