வேளாண்விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் போராட்டம்
ஒன்றிய மோடி அரசின் மூன்று வேளாண்விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் இன்று (செப்.27) நடைபெற்ற போராட்டத்தின் ஒருபகுதியாக இராஜாக்கமங்கலம் ஒன்றியம், இராஜாக்கமங்கலம் சந்திப்பில் அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், வாலிபர்,மாதர் சங்கங்கள் ஆகியவற்றின் சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.
சாலை மறியலுக்கு கே.பி.பெருமாள் (சிஐடியு), முருகேசன்(எல்பிஎப்),நிமில்ட்டன் (ஐஎன்டியுசி), ரவிக்குமார் (எம்எல்எப்), நாகேந்திர குமார்(ஏஐடியுசி), ரெகுபதி (மாதர் சங்கம்), எஸ்.கே.பிரசாத்(விவசாய சங்கம்), ஆர். குமரேசன் (விவசாய தொழிலாளர் சங்கம்) ஆகியோர் தலைமை தாங்கினர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ்.கண்ணன் போராட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதில் அசோக்ராஜ், அந்தோணிமுத்து, தாமோதரன், மிக்கேல்நாயகி, முத்துகிருஷ்ணன், மனோகரன், வைகுண்டதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர். 34 ஆண்கள், 36 பெண்கள் என மொத்தம் 70 பேர் கைதாகினர்.
No comments
Thank you for your comments