Breaking News

சிவில் சர்வீஸ் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் தேர்வு

இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் தேர்வு.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ள முத்தலக் குறிச்சி பகுதியைச் சார்ந்த கிருஷ்ணராஜ் ஓமனா தம்பதியர்களின் மகனான பிரதீப் என்பவர்  இந்திய அளவில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 343 வது இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். 

முதல் முயற்சியில் வெற்றி பெறமுடியாத நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக கடுமையான முயற்சியினால் இந்த முறை வெற்றி பெற்றதாகவும். மேலும் அவர் கூறுகையில் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்ட கடுமையான முயற்சியினாலும் பெற்றோர்கள், தங்கை,  உறவினர்கள், மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு மற்றும் உறு துணையாலும் இந்த முறை வெற்றி பெற முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார். 

இதற்காக துணை நின்று அனைவருக்கும் தன்னுடைய மனமார்ந்த நன்றியையும் தெரிவித்தார். இந்த வெற்றியை தொடர்ந்து அவருடைய பெற்றோர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இனிப்பு வழங்கி இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொண்டாடினார்கள்..

No comments

Thank you for your comments