திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மீது ரூ.12 கோடி மோசடி புகார்
செங்கல்பட்டு:
தையூர் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் ரூ.12 கோடி மோசடி செய்ததாக, ஜெயின்லால் சவுத்ரி என்பர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
சென்னையை சேர்ந்த ஜெயின்லால் சவுத்ரி என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் திருப்போரூர் அடுத்த தையூர் முன்னாள் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறி ஆவணங்களை கொடுத்து முதல்கட்டமாக 6 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். பின்னர் மேலும் தொழில் செய்ய பணம் தேவைப்படுவதாக கூறி 6 கோடி பணத்தை வாங்கியுள்ளார்.
பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்தில் பணத்தை திருப்பித் தருவதாக கூறிய திமுக பிரமுகர் சில ஆண்டுகள் கழித்து நான் உன்னிடத்தில் பணம் ஏதும் வாங்கவில்லை என கூறியுள்ளார் .
மேலும் ஆவணங்களை சரி பார்த்தபோது அவை அனைத்தும் போலியானவை என தெரியவந்தது
தொடர்ந்து ஜெயின்லால் சவுத்ரி அவர்கள் திமுக பிரமுகர் ராமகிருஷ்ணன் அவர்களை பணம் திரும்பி கேட்ட போது உன்னை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து உள்ளார்
இதனால் மன உலச்சல் அடைந்த ஜெயின்லால் சவுத்ரி அவர்கள் இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயன்று உள்ளார்
இதனை அடுத்து ஜெயின்லால் சவுத்ரி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்
புகார் மனுவை பெற்றுக்கொண்ட கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் போலி ஆவணங்களை கொடுத்து பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



No comments
Thank you for your comments