Breaking News

ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம்...

கடலூர்

கடலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் விருத்தாச்சலம் அடுத்த ஸ்ரீமுஷ்ணம்  செல்வா பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குறிஞ்சி செல்வன் தலைமை தாங்கினார்மாநில நிர்வாகிகள் ஜெகதீசன் தமிழ்மணி விஸ்வநாதன் பாரதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார் வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் ராமன் நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

மாவட்ட செயலாளரும் மாநில பொறுப்பாளருமான வீரமணி சங்க செயல்பாடுகள்வளர்ச்சி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து பேசினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம், மாநில செய்தி தொடர்பாளர் சந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு கூட்டமைப்பின் கோரிக்கைகளை கல்வி அமைச்சரிடம் வழங்கிய நிகழ்வுகள் அமைப்பில் எதிர்கால வளர்ச்சி மறுசீரமைப்பு  குறித்து சிறப்புரை ஆற்றினர் .

மேலும் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற அண்ணாகிராமம் ஒன்றிய தலைவர் மதனுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவிக்கப்பட்டது 

தீர்மானங்கள்

கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டும், 1-6-2009க்கு முன்னும் பின்னும் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், பதவி உயர்வில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்து ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து பரிசீலனை செய்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு  சென்று நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை பாராட்டுதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன 

கூட்டத்தில் மேனாள் கடலூர் மாவட்ட தலைவர் ராஜசேகரன்,மாநில மேனாள் இணை செயலாளர் தமிழ்குமரன், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயசீலன், பிரச்சார செயலாளர் சிட்டிபாபு, மகளிரணி செயலாளர் அன்புச்செல்வி, செய்தி தொடர்பாளர் மாயவேல்மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அம்பேத்கர்ராஜேந்திரன், நாராயணசாமி,சண்முகம், முத்துக்கண்ணு , நாராயணன், ஒன்றிய நிர்வாகிகள், தலைவர் செயலாளர் ,பொருளாளர் முறையேமங்களூர் கந்தசாமி,தங்கராசு, வீரராஜன், விருத்தாச்சலம்வீர வடிவேலன், பழனிவேல், காட்டுமன்னார்கோயில் பாலு,நல்லூர் தாமோதரன், சத்தியமூர்த்தி,கெங்காசலம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

 

No comments

Thank you for your comments