அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பண்ணந்தூர் அருகேயுள்ள சந்தனூர் கிராமத்தில் உள்ள புறம்போக்கு பாதையில் ஒடசகரை, வளையாம்பள்ளம் திண்டல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் நீண்ட காலமாக பயன்படுத்திவந்த பொது வழிப்பாதையை ஊராட்சி மன்ற தலைவர் தடுத்து வருவதாகவும் மேலும் இந்த பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமலும் தெருவிளக்கு கட்டமைப்பு போன்ற மக்கள் வாழும் அடிப்படை வசதிகள் கூட ஏற்ப்படுத்தி தராமல் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் நீண்ட நாட்களாக வாடகை டிராக்டர்களில் தண்ணீர் எடுத்துவந்து தங்களது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதாகவும், கிராம மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த பாதையை துண்டிப்பு செய்வதால் இக்கிராம மக்களுக்கு மாற்று பாதை இல்லாமல் பெரிதும் அவதியடைந்து வருகின்றனர். இறப்பு மற்றும் மருத்துவ தேவைகளுக்கு கூட செல்ல முடியாத சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாக உடனடியாக தலையிட்டு அடைக்கப்பட்டுள்ள பாதையை மீட்டு கிராம மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





No comments
Thank you for your comments