பட்டப்பகலில் திருடர்கள் கைவரிசை... 50 சவரன் நகைகள், ரூ.1,30,000 பணம் கொள்ளை சம்பவம்...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே அரசு ஊழியரின் வீட்டின் கதவை உடைத்து 50 சவரன் நகைகள், 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு மர்ம நபர்கள் கைவரிசை.... காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விசாரணை....
காஞ்சிபுரம் பெரியார் நகர் அருகே உள்ள சுதர்சன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் கவிதா- ராஜு தம்பதியினர்.
கவிதா வாலாஜாபாத் சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது கணவர் ராஜு ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கணவன்,மனைவி இருவரும் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு சென்னையில் உள்ள உறவினருக்கு குழந்தை பிறந்துள்ளதை அறிந்து பார்க்க சென்னைக்கு சென்றுள்ளனர்.‘
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கவிதாவின் வீட்டின் கதவை உடைத்து வீட்டின் பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள், 1 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை சாதூர்யமாக திருடிச் சென்றுள்ளனர்.
சென்னையிலிருந்து திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு உடனடியாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து உள்ளனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
பட்டப்பகலிலேயே வீடுகள் நிறைந்த பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருட்டுச் சம்பவம் நடைபெற உள்ளதால், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
✒ செய்தியாளர் E. ஜாபர்



No comments
Thank you for your comments