காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டும்...மத்திய அமைச்சர் எல் முருகனிடம் சங்கராச்சாரியர் கோரிக்கை
காஞ்சிபுரம்:
காசியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டும் என்று மத்திய அமைச்சர் எல் முருகனிடம் சங்கராச்சாரியர் கோரிக்கை வைத்துள்ளார்.
மத்திய பால்வளம், மீன்வளம், கால்நடை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகாபெரியவர் மணி மண்டபத்திற்கு வருகை தந்தார்.
பின்னர் மணிமண்டபத்தில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு வரும் ஸ்ரீவிஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது விஜயேந்திரர், மக்கள் பயன்பெறும் வகையில் சிறப்புடன் பணியாற்றும்படி ஆசி வழங்கினார்.
மேலும் பல்துறை வல்லுநர் போல் பல் துறை மந்திரியாக முருகன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் காசி ராமேஸ்வரத்திற்கு காஞ்சிபுரம் வழியாக ரயில் விட வேண்டுமென தனது விருப்ப மனுவை மத்திய அமைச்சர் முருகனிடம் சங்கராச்சாரியார் வழங்கினார்.
✒ செய்தியாளர் E. ஜாபர்




No comments
Thank you for your comments