Breaking News

நோயாளியிடம் ஆசைவார்த்தை கூறி ஊராட்சி மன்ற தலைவர் நிலத்தை எழுதி வாங்கியதாக பகீர் குற்றச்சாட்டு!



விருத்தாசலம்:

விருத்தாசலம் அடுத்த ஊ.ஆதனூர் ஊராட்சிக்கு இலவசமாக மனை வழங்கிய இருதய நோயாளி அமிர்தலிங்கத்திற்கு டேங்க் ஆப்பரேட்டர் பணி வழங்குவாரா...?  மாவட்ட ஆட்சித் தலைவர் என்று ஆவலோடு எதிர்பார்க்கின்றனர் அப்பகுதி மக்கள்...

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஊ.ஆதனூர் கிராமத்தில் சுமார் 700 பேர் வாழ்ந்து வருகின்றனர்.

அதே கிராமத்தில் வசித்துவரும் தலித் சமூகத்தை சேர்ந்த அமிர்தலிங்கம், மனைவி சங்கீதா இவர்களுக்கு இரண்டு பெண்,  ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

அமிர்தலிங்கத்துக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இருதய நோய் வாய் பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் அவரது மனைவி சங்கீதா கல்லீரல் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான சர்வே எண் 171-ல் 1/2 சென்ட் மனையினை, ஊராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க  ஊராட்சி மன்றம் தலைவர் புஷ்பலதா அன்புமணி என்பவர் ஊராட்சிமன்ற பெயருக்கு எழுதி வாங்கியுள்ளார். தற்போது அதில் போர்வெல் அமைத்து ஊராட்சியில் வாழும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் நிலத்தை எழுதி கொடுத்தால் அமிர்தலிங்கதிற்கு டேங்க் ஆபரேட்டர் வேலை வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதாவின் கணவர் அன்புமணி மேற்படி நிலத்தை எழுதி வாங்கி உள்ளார். இதுநாள் வரை அவர்களுக்கு அந்த வேலையை வழங்காமலும் ஏமாற்றி வந்துள்ளார்கள்.

மேற்படி டேங்க் ஆபரேட்டர் பணியினை  அமிர்தலிங்கம் தான் தற்போது அந்த பகுதி பொதுமக்களுக்கு மேல் நீர் தேக்க  தொட்டியில் நீர் சேகரித்து திறந்து விடும் பணியை செய்து வருகிறார்

இது பற்றி பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை... அமிர்தலிங்கம் என்பவருக்கு சம்பளமும் வழங்கவில்லை... 

இதுபற்றி பலமுறை கம்மாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுக்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட அமிர்தலிங்கம் அவரது மனைவி சங்கீதா (மற்றும்) அப்பகுதியில் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆனால், டேங்க் ஆப்பரேட்டர் பணியின் சம்பளத்தை இறந்து பத்தாண்டு ஆகிய அதே கிராமத்தை சேர்ந்த  ஒருவரது பெயரில் ஏமாற்றி எடுத்து வந்துள்ளாதாக ஊராட்சி செயலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேற்படி கடலூர்  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் சொந்த இடத்தை ஊராட்சிக்கு வழங்கி பாதிக்கப்பட்ட இருதய நோயாளி அமிர்தலிங்கத்திற்கு டேங்க் ஆப்பரேட்டர் பணி வழங்கி நடவடிக்கை எடுப்பாரா....? ஆவலோடு எதிர்பார்க்கும் அப்பகுதி சமூக ஆர்வலர்கள்

No comments

Thank you for your comments