Breaking News

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு- வேலூரில் இன்று முதல் ரூ.871.50

புதுடெல்லி:

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  இன்று    14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது.  வேலூரில் ஒரு சிலிண்டர் விலை ரூ.846ஆக இருந்தது. ரூ.25.50 காசு உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.871.50 ஆக உயர்ந்துள்ளது.



கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து அதன் விலை ஏறுமுகமாகவே இருக்கிறது.

இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி இருக்கிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 ரூபாயையும் தாண்டியுள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு விலையையும் உயர்த்துவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எரிவாயு விலை உயர்த்தப்பட்டு வருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் வீட்டு உபயோக மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 முறை ஏற்றப்பட்டது. டிசம்பர் 1ம் தேதியும், 15ம் தேதியும் தலா 50 என 100 விலையேற்றம் செய்தனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 3  முறை  சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை  பிப்ரவரி 4-ம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில்,  பிப்ரவரி 15-ம் தேதி மேலும் 50 ரூபாய் அதிகரித்து கேஸ் சிலிண்டர் விலை 785 ரூபாயாக இருந்தது. இதனை தொடர்நது மேலும்  பிப்ரவரி 25ம் தேதி  மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ எடை கொண்ட மானிய விலை சிலிண்டரின் விலை 810 ரூபாயாக அதிகரித்தது.

இதனை தொடர்ந்து மார்ச்  மாதம் தொடக்கத்தில் முதல் நாளே  சென்னையில் சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று சமையல் எரிவாயு விலை திடீரென 25.50 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. 3 மாதத்திற்கு பிறகு எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி இருக்கிறார்கள்

14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.25.50 உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.825ஆக இருந்தது. ரூ.25.50 காசு உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.850.50 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல 19 கிலோ கொண்ட வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு ரூ.84.50 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதன் விலை ரூ.1603ஆக இருந்தது. இப்போது ரூ.1685.50ஆக உயர்ந்து உள்ளது.

வேலூரில் ஒரு சிலிண்டர் விலை ரூ.846ஆக இருந்தது. ரூ.25.50 காசு உயர்த்தப்பட்டு இருப்பதால் ரூ.871.50 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில், கடந்த ஜனவரியில் ரூ.710 ஆக இருந்த சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.140.50 உயர்ந்து  ரூ.850.50 ஆக தற்போது அதிகரித்துள்ளது.

வேலூரில், கடந்த ஜனவரியில் ரூ.731 ஆக இருந்த சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.140.50 உயர்ந்து  ரூ.871.50 ஆக தற்போது அதிகரித்துள்ளது.

இதற்கு முன்பு சமையல் எரிவாயுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கப்பட்டு வந்தது. அதாவது மானியமாக ரூ.198.62   வழங்கப்பட்டு வந்தது. ஆனால்  கொரோனா தொற்று ஏற்றபட்ட பின்பு   மானியமாக ரூ.31.62 வழங்கப்படுகிறது. பலபேருக்கு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

மிகக் குறைந்த அளவில் வாய்க்கும் வயிற்றுக்கும் ஆக வாழ்க்கை நடத்தும் நடுத்தர வகுப்பு மக்களும் ஏழை மக்களும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக தங்கள் வாழ்க்கையை நடத்த பெரிதும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இவற்றின் விலை உயர்வு காரணமாக தொடர்ந்து மற்ற பொருள்களின் விலையும் உயர  வாய்ப்பு உள்ளது. அத்தகைய விலை உயர்வும் பணவீக்கமும் நடுத்தர வகுப்பு மக்களுக்கு பெரும் அச்சத்தை தருவதாக உள்ளன. இதற்கு இல்லத்தரசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூபாய் 100 தாண்டிவிட்டது...  அதே போன்று சமையல் எரிவாயு  சிலிண்டர் விலை ரூ.1000த்தை தாண்ட வைத்துவிடுவார்களோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் தொற்றிக்கொண்டுள்ளது... 

சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments

Thank you for your comments