Breaking News

உத்திரமேரூர் தொகுதி அ.தி.மு,க., வேட்பாளராக முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தேர்வு?

 காஞ்சிபுரம், மார்ச் 2-  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் தொகுதியில் அதிமுகவில் வேட்பாளராக களம் இறங்க முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் கசியத் தொடங்கியுள்ளன.



காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய சட்டபை தொகுதியாக விளங்குகிறது உத்திரமேரூர். அதாவது கடந்த 40 ஆண்டுகளாக, உத்திரமேரூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என ஒரு செண்டிமென்ட் வழக்கம் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2016ம் நடந்த சட்டசபை தேர்தலில், உத்திரமேரூர் தொகுதியை தி.மு.க., கைப்பற்றியது. ஆனால், இதற்கு எதிர்மாறாக தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. உத்திரமேரூர் தொகுதியின் செண்டிமென்ட்டும் முறியடிக்ப்பட்டது.

அப்போது தி.மு.க., சார்பில் சாலவாக்கத்தை சேர்ந்த் வேட்பாளராக சுந்தரும், அ.தி.மு.க., சார்பில் வேட்பாளராக வாலாஜாபாத் கணேசனும் போட்டியிட்டனர். தொகுதி மக்களிடம் செல்வாக்கு என்று கூடுதலாக தொகுதியை தக்க வைத்திருந்த தி.மு.க., வேட்பாளர் சுந்தர் வெற்றி பெற்றார். உத்திரமேரூர் தொகுதியின் ‘ஃபார்முலா’ 40 ஆண்டிற்கு பின் மாறிவிட்டது. தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. தற்போது நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் உத்திரமேரூர் தொகுதியில் தி.மு.க., சர்பில் மீண்டும் சுந்தருக்கு ‘சீட்’ வழங்கினால், இவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அ.தி.மு.க., வேட்பாளரை களத்தில் இறக்கினால்தான், உத்திரமேரூர் தொகுதியை அ.தி.மு.க., கைப்பற்ற முடியும் என்ற சூழ்நிலை இருந்து வருகிறது.  எனவே, இந்த முறை உத்திரமேரூர் தொகுதியை ‘கட்டாயம் கைப்பற்ற’ வேண்டும் என்ற நிலைக்கு அ.தி.மு.க., தள்ளப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் உள்ள கூட்டணி கட்சியான பா.ம.க.,விற்கோ அல்லது வேறு கட்சியினருக்கோ ஒதுக்கினால், தி.மு.க., சுந்தரின் வெற்றி மிகச் சுலபமாகவிடும்.

உத்திரமேரூர் தொகுதியை அ.தி.மு.க., கட்டாயம் கைப்பற்ற வேண்டும் என்ற முடிவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் உறுதியாக உள்ளனர். உத்திரமேரூர் தொகுதியை கைப்பற்றக்கூடிய தகுதியானவரை கட்சியின் மேலிடம் கடந்த 10 மாதங்களாக அலசி ஆராய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் முதல் இடத்தில் ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்ளார். அதாவது இந்த தொகுதியில் களம் இறக்க முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்களில் முதல் இடத்தை பிடித்துள்ளவர் ரஞ்சித்குமார். காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி மாவட்ட செயலாளராக தற்போது ஆர்.வி.ரஞ்சித்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் உத்திரமேரூர்  தொகுதிக்கு உட்பட்ட முத்தியால்பேட்டை கிராமத்தில் வசித்து வருகிறார். ஏழை & எளிய மக்களுக்கு கேட்காமலே பல்வேறு உதவிகளை செய்யக் கூடியவர்தான் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமா£ர். ‘கஜா & நிவர்’ புயலால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள், துணி மணிகள், பண உதவிகளை வாரி வழங்கியுள்ளார். அப்போது வீட்டை இழந்து தவித்தார் ஒரு பெண்மணி. அவர் நிர்கதியாய் நடுரோட்டில் நின்றார். அவரது நிலை கண்டு மனம் இறங்கினார் ரஞ்சித்குமார். நாகப்பட்டினம் மாவட்டம், காலைநாயர் கிராமத்தைச் சேர்ந்த சிந்தாமணி என்பவர்தான் அவர். அவருக்கு தனது சொந்த செலவில் ரூ. 7 லட்சம் மதிப்பில் கான்கீரிட் வீடு கட்டி கொடுத்து தனது பரந்த மனதையும் வள்ளல் குணத்தையும் எடுத்துக் காட்டியுள்ளார்.        

கொரோனா காலத்திலும் உதவியவர் இவர்தான். அதாவது கொரோனா தொற்று நோய் தமிழகத்தையும் உலுக்கி எடுத்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வந்தது. அப்போது, உத்திரமேரூர், காஞ்சிபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கியுள்ளார். அ.தி.மு.க., கட்சி சார்பிலும் & அமைச்சர் & நலத்திட்ட உதவிகள் வழங்கும் எந்த விழாவாக அறிவிக்கப்பட்டாலும்  ரஞ்சித்குமார் தலைமையில் முத்தியால்பேட்டையே ‘குலுங்கும்‘ வகையில் தனது சொந்த செலவில் பெரும் விழாவை நடத்தி காண்பிப்பார்.      

அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர். கட்சி மூத்தவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரிடமும் பாசத்துடன், அன்பாகவும் பழகக்கூடியவர் ரஞ்சித்குமார். உத்திரமேரூர் தொகுதிக்கு ‘ரஞ்சித்குமார் தான் வேட்பாளர்’ என்று தலைமையிடம் அறித்துவிட்டால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அ.தி.மு.க., கட்சி பொறுப்பளார்கள் முதல் தொண்டர்கள் வரை ரஞ்சித்குமாருக்கு தேர்தல் பணியை ஆற்ற தயார் நிலையில் உள்ளனர். வெற்றியை நிர்ணயிக்கும் ‘பேட்டை’ மக்கள் இவர் பக்கமே உள்ளனர். காஞ்சிபுரம் & வாலாஜாபாத் சாலையில் உள்ளது ஐயம்பேட்டை, முத்தியால்பேட்டை, ராஜம்பேட்டை, கருக்குப்பேட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பேட்டைகள் உள்ளன. இந்த பேட்டைகள் உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்டது. இங்கு உள்ளவர்கள் பெரும்பாலும் நெசவு மற்றும் விவசாயத் தொழிலை செய்து வருகின்றனர். இந்த பேட்டையில் மட்டும் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒட்டுகள் உள்ளன.. இவர்கள் தேர்வு செய்யும் வேட்பாளருக்கு ஒட்டுமொத்த ஒட்டுகளையும் பேசி வைத்ததுபோல் ‘ஒருவருக்கே’ பதிவு செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உத்திரமேரூர் சட்டசபை தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் மேற்கண்ட பேட்டை மக்களின் முக்கியப் பங்காக இருந்து வருகிறது. முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் எங்களது பேட்டை பகுதிக்கு ஒரு முறை ஓட்டு கேட்டு வந்தாலே போதும் எங்களது ஒட்டுமொத்த ஓட்டுக்களையும் அவருக்கே பதிவு செய்ய தயாராக உள்ளோம் என்கின்றனர் ‘பேட்டை’ வாழ் பொதுமக்கள்.

Êகட்சி மூலமாக சம்பாதிக்க நினைக்காதவர் இவர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆர்.வி.ரஞ்சித்குமார், தனது முழு நேரத்தையும் கட்சிக்கே செலவழிக்க கூடியவர். மக்கள் நன்றாக இருக்கணும், கட்சி மேலும் மேலும் வளர வேண்டும். என்ற நல்லெண்ணத்துடன் ஒவ்வொரு ஆண்டும் சபரி மலைக்கும் & திருப்பதிக்கும் நடந்தே சென்று சுவாமியை தரிசித்து பிரார்த்தனை செய்து வருகிறார். கட்சி மூலமாக ‘தான் சம்பாதிக்க’ வேண்டும் என ரஞ்சித்குமார் ஒரு நாளும் நினைத்தது இல்லை என அ.தி.மு.க,, நிர்வாகிகளே கூறுவதை கேட்க முடிகிறது. நம்பிக்கையுடன் அ.தி.மு.க., மேலிடம், முத்தியால்பேட்டை ரஞ்சித்குமாரை உத்திரமேரூர் தொகுதியில் களத்தில் இறக்கினால், பெருவாரியான ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். தமிழகத்தில் சிறந்த எம்.எல்.ஏ.,வாக திகழ்ந்து மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்து தருவார் என, நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த உழைப்புக்கு முத்தியால்பேட்டை ரஞ்சித்குமாருக்கு நான்கு நாட்களில் நல்ல விடை கிடைக்கும், அது  வரை காத்திருப்போம் என்கின்றனர் உத்திரமேரூர் தொகுதி மக்கள். அதிமுக தலைமை ஏற்கனவே அலசி ஆராய்ந்தது போன்று ரஞ்சித்குமாருக்கு உத்திரமேரூர் தொகுதியை ஒதுக்கினால் வெற்றிக்கனியை அவர் தட்டிபறிப்பார் என்பது மட்டும் உறுதி. அதிமுக இறுதி முடிவாக யாரை தேர்வு செய்து அறிவிக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments

Thank you for your comments