இந்திய கடற்படையில் முன்னாள் படைவீரர்களுக்கு பணி ஒதுக்கீடு - கடைசி தேதி 07-03-2021
ஈரோடு, மார்ச 3-
இந்திய கடற்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு 115 பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் தகவல்.
இந்திய கடற்படையில் Tradesman Mate Classified as Group ‘C’, Non Gazetted “ Industrial’’ at various commander பல்வேறு பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்களுக்கு 115 பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். முன்னாள் படைவீரர்களுக்கு இராணுவ பணிகாலத்துடன் மூன்று வருடங்கள் வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி - பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐவுஐ-யில் ஏதாவது ஒரு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் சான்று பெற்றிருத்தல் வேண்டும். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் 07-03-2021-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திட வேண்டும்.
இத்தேர்விற்கு தகுதியான முன்னாள் படைவீரர்கள் www.joinindiannavy.gov.in அல்லது www.indiannavy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்விற்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் தாங்கள் விண்ணப்பித்த விபரத்தினை ஈரோடு, 106/3 காந்திஜி சாலையில் உள்ள ஜவான்ஸ்பவன் மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல துணை இயக்குநர் அலுவலகத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, முன்னாள் படைவீரர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments
Thank you for your comments