ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை... வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெற உத்தரவிட முடியாது-ஐகோர்ட் திட்டவட்டம்
சென்னை, மார்ச் 3-
ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை என வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெற உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்களிக்க வரும் வாக்காளர்களிடம், ஓட்டுக்கு பணம் பெற வில்லை என சத்திய பிரமாணம் பெற உத்தரவிட வேண்டும் எனக் கோரி, சூரியா பகவான் தாஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களிடம் சத்திய பிரமாணம் பெறுவது என்பது சாத்தியமில்லாதது என்பதால், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், அது நீதிமன்றத்தின் பணியல்ல எனவும், இதுசம்பந்தமாக மனுதாரர் அரசை அணுகலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து

No comments
Thank you for your comments