மாவட்ட பதிவாளர்கள் மாற்றம்!
சென்னை, மார்ச் 2-
பதிவுத் துறையில் மூன்று டி.ஐ.ஜி.,க்கள், எட்டு மாவட்ட பதிவாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
பத்திரப்பதிவு துறையில், கோவை மண்டல டி.ஐ.ஜி., எம்.ஜெகதீசன், சென்னையில் பதிவுத் துறை பயிற்சி மையத்துக்கும், அங்கு பணியாற்றிய டி.சுவாமிநாதன், மதுரை மண்டலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல, மதுரை மண்டல டி.ஐ.ஜி., வி.வாசுகி, கோவை மண்டலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதே போல, மாவட்ட பதிவாளர்கள் எட்டு பேர், தனிப்பட்ட கோரிக்கைகள் அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணையை, வணிக வரி மற்றும் பதிவுத் துறை செயலர் பீலா ராஜேஷ், பிறப்பித்துள்ளார்.

No comments
Thank you for your comments