மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம்!
பூவிருந்தவல்லி,மார்ச்2-
திருவள்ளூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், தங்களுக்கான வாடகையை தமிழக அரசு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மண் அள்ளும் இயந்திரங்கள் இயக்கப்படுகின்றன. தற்போது வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் மற்றும் வாகன உதிரி பாகங்களின் விலையேற்றம் ஆகியவற்றால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் குறைந்த வாடகையில் வாகனங்களை இயக்குவதால் தங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். எனவே தனி நபர்களிடமிருந்து நியாயமான வாடகை பெரும் வகையில் தமிழக அரசே மூன்று மணி நேர பணிக்கு ஆரம்பக்கட்ட வாடகையாக 3 ஆயிரத்து 500 ரூபாயும், அதற்குமேல் இயக்கப்படும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 1000 ரூபாய் வீதம் வாடகையை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments
Thank you for your comments