208 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு!
வேலூர்,மார்ச் 2-
வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கிகள் வைத்துள்ள 763 பேரில் 208 பேர் மட்டும் தங்களது துப்பாக்கிகளை காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பை தொடர்ந்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கைத்துப்பாக்கிகள், நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருக்க கூடாது என்பது தேர்தல் விதிகளில் ஒன்றாகும்.
இதையடுத்து துப்பாக்கி வைத்திருப்பவர்கள் உடனே அருகில் உள்ள காவல் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் துப்பாக்கி வைத்திருக்க முறைப்படி அனுமதி பெற்ற 763 பேரில் 208 பேர் மட்டும் தங்கள் துப்பாக்கிகளை ஆங்காங்கே அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு வேலூர் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

No comments
Thank you for your comments