வாக்கு எண்ணும் மையங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ஈரோடு, மார்ச் 23-
ஈரோடு மாவட்டம், சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து பெரியியல், தொழில்நுட்ப கல்லூரியில் நேற்று (22.03.2021) தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் இஆப., அவர்கள் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் யோகேஷ்குமார் இஆப., அவர்கள் உடனிருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் 2021 தொடர்பான பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு, சித்தோடு சாலை போக்குவரத்து மற்றும் பெரியியல் கல்லூரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து சித்தோடு சாலை போக்குவரத்து மற்றும் பெரியியல் கல்லூரியில் ஈரோடு மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் அவர்கள் 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மேலும், வாக்கு எண்ணும் மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் குறித்தும், வாக்கு எண்ணும் அறை, வாக்குபெட்டிகள் இருப்பறை, வாகனங்கள் நிறுத்தும் இடம், வாக்குச்சாவடி முகவர்கள் அறை, ஊடக மையம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், தேர்தல் பார்வையாளர்கள் அறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரை, செயற்பெரியாளர் (பொதுப்பணித்துறை) ரவிக்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments