Breaking News

பொதுமக்கள் புகார்களை அளிக்க அழைப்பு விடுப்பு

திருவள்ளூர், மார்ச் 23-

தேர்தல் பொது பார்வையாளர்களை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து புகார்களை அளிக்கலாம் - மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்  பா.பொன்னையா அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டமன்ற தேர்தல் 2021-யை முன்னிட்டு திருவள்ளுர் மாவட்டத்தில் பணியில் உள்ள தேர்தல் (பொது) மற்றும் காவல் பார்வையாளர்கள் அவர்கள் திருவள்ளுர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்கள். எனவே, திருவள்ளுர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் கீழ்காணும் நேரங்களில் பொது மற்றும் காவல் பார்வையாளர்கள் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் புகார்களை அளிக்கலாம் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், புகார் தொடர்பாக தேர்தல் பொது மற்றும் காவல் பார்வையாளர்களை அவர்களின் கைபேசி எண்ணில் 24 X 7-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர்  பா.பொன்னையா  அவர்கள் தெரிவித்துள்ளார்.




No comments

Thank you for your comments