Breaking News

தேர்தல் முறைகேடுகள் குறித்து 24 மணிநேர புகார் அளிக்கலாம்

ஈரோடு, மார்ச் 4-

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021-ஐ முன்னிட்டு பணப்பட்டுவாடா மற்றும் இதர தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணிநேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்        திரு.சி.கதிரவன் இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது, 



தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது. பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை நீக்ஷிமிநிமிலி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இதன் மூலம் புகார்களை தெரிவிக்கலாம். 

மேலும், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலக இலவச தொலைபேசி எண் 18004257024 மற்றும் 1950 அல்லது தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்.0424-2257901, 2256782, 2251863 மற்றும் 2256524 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என  மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  சி.கதிரவன்  அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments