பெருந்துறை கோட்டம் மின் தடை அறிவிப்பு
ஈரோடு, பிப்.24-
பெருந்துறை பல்லகவுண்டன்பாளையம் 110/11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி வரும் 25.02.2021 வியாழக்கிழமையன்று செயல்படுத்தப்படவுள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த பல்லகவுண்டன்பாளையம், விஐயமங்கலம், கள்ளியம்புதூர், வீரசங்கலி, பகளாயூர், நடுப்பட்டி, புத்தூர் பள்ளபாளையம், கூனம்பட்டி, தொட்டிபாளையம், மாச்சாபாளையம், கைக்கோளபாளையம், கினிப்பாளையம், புலவர்பாளையம், சாமியார் பாளையம், கஸ்தூரிபாளையம், ஆலாம்பாளையம், மேற்குபுதூர், வேப்பம் பாளையம், கந்தப்ப கவுண்டன் பாளையம், சொட்ட கவுண்டன் பாளையம், சாம்ராஜ் பாளையம், காங்கேயம் பாளையம், பழனிகவுண்டன் பாளையம் ஆகிய அனைத்து பகுதிகளிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு ஈரோடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments
Thank you for your comments