காலச்சக்கரம் செய்தி எதிரொலி!... தரையில் கிடந்த அதிமுக கொடிக்கம்பம் தலைநிமிர்ந்து நிற்க வழிவகுத்தது!
பூவிருந்தவல்லி,பிப்.24-
காலச்சக்கரம் செய்தி எதிரொலியால் ஆவடியில் கேட்பாரற்று விடப்பட்ட அதிமுக கொடிக்கம்பம் நிமிர்ந்து நிற்கிறது. அதிமுகவில் உள்ள ரத்தத்தின் ரத்தங்கள் காலச்சக்கரத்துக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் அதிமுக சோர்வு என்ற தலைப்பில் காலச்சக்கரம் நாளிதழில் புகைப்படத்துடன் கூடிய செய்தி நேற்று வெளியானது. அந்த செய்தியில் அதிமுக கொடிக்கம்பம் பராமரிப்பு இன்றி ஒரு ஆண்டு காலமாக தரையில் கிடப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த செய்தியானது அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பார்வைக்கு சென்றது. இதையடுத்து அவர் உடனடியாக அதிமுக தொண்டர்களை அழைத்து ஆலோசனை நடத்தி அந்த கொடிக்கம்பத்தை புதியதாக வண்ணம் பூசி அந்த கொடிக்கம்பம் எங்கிருந்து அகற்றப்பட்டதோ அதே இடத்தில் மீண்டும் நட்டு வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அமைச்சரின் அதிரடி உத்தரவின் பேரில் அதிமுக நிர்வாகிகள் கொடிக்கம்பத்துக்கு வண்ணம் பூசி அமைச்சர் கூறியது போல அந்த கொடிக்கம்பம் எங்கிருந்ததோ அதே பழைய இடத்தில் கொடிக்கம்பம் வைக்க தயாராக இருக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் காலச்சக்கரம் நாளிதழ் செய்தியாளருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த சம்பவம் அனைத்தும் காலச்சக்கரம் நாளிதழ் செய்தியால் விளைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments
Thank you for your comments