சேஷல்ஸ் தீவில் “இந்தியர் தினம்”... நேரில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு
சென்னை, ஜூன் 9-
தமிழகம் வந்துள்ள சேஷேல்ஸ் நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை
அமைச்சர் அலைன் செயிண்ட் ஆங்கே, இன்று திமுக பொருளாளரும், தமிழக சட்டசபை
எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் நேரில் சென்று
சந்தித்தார்.
அப்போது வரும் அக்டோபர் மாதம் 4-ம் தேதியன்று சேஷல்ஸ் தீவில்
நடைபெறவுள்ள "இந்தியர் தினம்" நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என
மு.க.ஸ்டாலினுக்கு அவர் அழைப்பிதழ் வைத்தார்.
இந்த சந்திப்பின்போது சேஷல்ஸ் நாட்டிற்கான தமிழகத்தின் தூதர்
எம்.எஸ்.சாய், "சேஷேல்ஸ் - இந்தியா" இந்தியர் சங்கத்தின் தலைவர்
கே.ராமகிருஷ்ணன், கண்ணன், தீபன் குரூப்ஸ் சண்முகம் மற்றும் வெங்கட் ஆகியோர்
உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments