துபாயில் இன்றும், நாளையும் ரமலான் சிறப்பு நிகழ்ச்சிகள்
துபாய், ஜூன் 9-
புனித ரமலான் மாதம் துவங்கியுள்ளதையடுத்து உலக முஸ்லீம்கள் நோன்பு
இருந்து வருகிறார்கள். இந்நிலையில் துபாயில் இன்றும், நாளையும் சிறப்பு
நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிகழ்ச்சி அபுபக்கர் சித்திக் ரோடு மற்றும் ஷேக் ராஷித் ரோடு
சந்திப்பில் உள்ள ஹோர் அல் அன்ஸ் இப்தார் டென்ட்டில் நடைபெறுகிறது. முஃப்தி
உமர் ஷெரீஃப் வழங்கும் இந்நிகழ்ச்சி இன்று இரவு 10 மணிக்கு தராவிஹ்
தொழுகைக்கு பிறகு நடைபெறுகிறது.
நாளைய நிகழ்ச்சி துபாய் ராஷிதியாவில் உள்ள ராஷிதியா பள்ளியில் இரவு 10 மணிக்கு நடைபெற உள்ளது.
இரண்டு இடங்களிலும் இஷா மற்றும் தராவிஹ் தொழுகைக்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. இரவு 8.45 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு உளு
செய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனி இட
வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் குறித்து மேலும் விபரம் அறிய 056 7371442 / 056 7371449 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
zGreat article with excellent idea! I appreciate your post. Thanks so much and let's keep on sharing your stuff.
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News