சிவகாசி மாரனேரியில் பட்டாசு ஆலை வெடி விபத்து- 2 பேர் பலி
சிவகாசி, ஜூன் 9-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான
தனியார் பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இன்று காலையில் சிவகாசி அருகே மாரனேரியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் இரண்டு அறைகள் இடிந்து தரைமட்டமானது. வெடிவிபத்தை தொடர்ந்து தீயை
அணைக்க தீயணைப்பு வண்டிகள் விரைந்தன. அறைக்குள் வேலை செய்து கொண்டிருந்த
தொழிலாளர்களில் இருவர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்து விட்டதாக
அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடி விபத்து பற்றி
போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் தாசில்தார், வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர். இடிபாடுகளில் தொழிலாளர்கள் யாரும் சிக்கியுள்ளனரா
என்று தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த வாரம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடத்தில் தனியார்
பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மருந்து கலவை இருந்த அறை
இடிந்து முற்றிலும் தரைமட்டமானது. இந்த விபத்தில் அங்கு பணியில்
ஈடுபட்டிருந்த வலையபட்டியைச் சேர்ந்த குட்டியான் என்பவர் சம்பவ இடத்திலேயே
பரிதாபமாக பலியானார்.படுகாயமடைந்த மேலும் 2 இருவர் சிகிச்சை பலனின்றி
உயிரிழந்தனர். அந்த சோகம் மறைவதற்கும் இன்று இருவர் பட்டாசு ஆலை
வெடிவிபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சிவகாசி மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் அடிக்கடி வெடி விபத்து ஏற்பட
சரியான விழிப்புணர்வு இல்லாததும், இந்த பகுதியில் நிலவும் வெப்பமும் காரணம்
என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments
Thank you for your comments