ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல்... 2 பெண்கள் உட்பட 5 இந்தியர்கள் போட்டி
மெல்போர்ன், ஜூன் 9-
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 150 இடங்களுக்கும்,
செனட் சபையில் உள்ள 76 இடங்களுக்கும் அடுத்தமாதம் தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த 1987ம் ஆண்டுதான் இப்படி இரு சபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடந்தது.
அதன் பின்னர் இப்போதுதான் இப்படி சேர்த்து நடைபெறுகிறதாம்.
இந்தத் தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்களில் ஐந்து பேர் இந்திய
வம்சாவளியினர் ஆவர். 51 வயதான அலெக்ஸ் பாதல் என்ற சீக்கியர் கிரீன்ஸ்
பார்ட்டி சார்பாக போட்டியிடுகிறா். 43 வயதான லிசா சிங் தொழிலாளர் கட்சி
சார்பில் களம் கண்டுள்ளார். இவர் பிஜியை பூர்வீகமாகக் கொண்ட இந்திய
வம்சாவளியைச் சேர்ந்தவர்.
1989ம் ஆண்டு இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வசிக்கும் சசி
பட்டி., பெங்களூரைச் சேர்ந்த இந்திய பெற்றோருக்குப் பிறந்தவரான கிறிஸ்
காம்பியன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். இன்னொருவர் 39 வயதான மோஹித் குமார்.
இவர் இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலியாவில் செட்டிலானவர். இவர் லிபரல்
பார்ட்டி சார்பில் போட்டியிடுகிறார். இவர் 1994ம் ஆண்டு
பரீதாபாத்திலிருந்து இடம் பெயர்ந்து இங்கு வந்தவர் ஆவார்.
ஆஸ்திரேலயா நாடாளுமன்றத்திற்கு ஜூலை 2ம் தேதி தேர்தல் நடத்தப்படும்
என்று கடந்த மே 8ம் தேதிதான் பிரதமர் மால்கம் டர்ன்புல் அறிவித்திருந்தார்
என்பது நினைவிருக்கலாம்.
No comments
Thank you for your comments