தனித்தொகுதிகள் தாரைவார்ப்பு: உடன்பிறப்புகள் அதிர்ச்சி
பெரம்பலூர் தொகுதியில் கடந்த 1957 முதல் 2011 வரை 13 முறை சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளது. 1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. திமுக, அதிமுக உதயமான பிறகு திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ்,
பொதுவாக பெரம்பலூர் தொகுதியில் அதிமுக, திமுக மாறி, மாறி வெற்றி பெற்று வருகிறது. அதிமுக கட்சி கூட அப்போதைய கூட்டணி கட்சியான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரம்பலூரை ஒதுக்கியது. ஆனால், திமுக கட்சி உதயமான பிறகு 1962 முதல் 2011 வரை நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் திமுகதான் நேரடியாக பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வந்தது. ஆனால், இந்த முறை யாரும் எதிர்பாராத வகையில் கூட்டணி கட்சியான சமூக சமத்தவ படைக்கு (இக்கட்சியின் தலைவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி) தனித்தொகுதியான பெரம்பலூரை ஒதுக்கியுள்ளது திமுக. முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் சொந்த மாவட்டமான பெரம்பலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எம்எல்ஏ தமிழ்ச்செல்வன் மீண்டும் போட்டியிடுவதால் எளிதில் வெற்றி பெறலாம் என்று உற்சாகத்தில் வலம் வந்த உடன்பிறப்புகள் தலைமை முடிவால் இப்போது வாயடைத்து நிற்கின்றனர்.
பெரம்பலூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ பழனிமுத்துவின் மகள் சிவகாமி அவரது தந்தைக்கு உள்ள செல்வாக்கு மற்றும் உறவினர்கள் பலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஓட்டு சதவீதம் மற்றும் திமுகவின் ஆதரவால் எளிதில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்ட சிவகாமி திமுக தலைமையிடம் பெரம்பலூர் தொகுதியை கேட்டு பெற்றுள்ளார். இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி கடந்த 1967ம் ஆண்டு உதயமானது. வரும் 2017ம் ஆண்டோடு தொகுதி உருவாகி 50 ஆண்டு (பொன்விழா) நிறைவடைகிறது. இதுவரை நந்த 11 தேர்தலில் 4முறை திமுக, 2 முறை திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக 5 முறையும் தொகுதியை கைப்பற்றி உள்ளது. இம்முறை அதிமுக சார்பில் கீதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திமுக சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்று கட்சியினரிடையே கடந்த சில வாரமாக பட்டிமன்றம் நடந்து வந்தது.
ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகத்துக்கு கிருஷ்ணராயபுரம் தொகுதியை தாரை வார்த்து திமுக 32 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி கட்சி வசம் தொகுதி சென்றதால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து உடன்பிறப்புகளால் இதுவரை மீள முடியவில்லை.
No comments
Thank you for your comments