Breaking News

வைகோவும், அவரது கூட்டணியினரும் பாழும் கிணற்றில் விழப்போகிறார்கள்: பாஜ சி.பி.ராதாகிருஷ்ணன்

நாகர்கோயில், ஏப்.12-
அகில இந்திய கயிறு போர்டு சேர்மனும், முன்னாள் தமிழக பாஜ தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் நாகர்கோயிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் ஒரு ஊழலற்ற அரசு அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் எழுச்சி ஏற்பட உள்ளது. புதிய வாக்காளர்கள் 1 கோடிக்கும் மேற்பட்டவர்கள் மாற்றத்தை விரும்பி வாக்களிக்க காத்திருக்கின்றனர். மக்கள் நலக்கூட்டணியி எத்தனை பேர் வேண்டுமானாலும் இணையலாம். அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோதான் பாழும் கிணற்றில் விழும்போது கூட தன்னுடன் நான்கைந்து பேர் விழ வேண்டும் என்று நினைக்க
கூடியவர். நிச்சயமாக அவரும், அவரோடு இணைந்தவர்களும் பாழும் கிணற்றில் விழப்போவதை நாங்கள் பார்க்கத்தான் போகிறோம். காரணம், மக்கள் நலக்கூட்டணி மக்கள் நலனுக்கு எதிரான கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள். மிகப்பெரிய தோல்வியை வைகோ தழுவப்போகிறார். அவரோடு இணைந்தவர்களும் அதுபோன்று தோல்வியை தழுவ இருக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments