காஞ்சிபுரம் ஏப், 13-
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அக்ஷயா பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் மாற்றுதிறனாளிகளுக்கான அதிநவீன மூன்று சக்கர வாகனம் வடிவமைத்துள்ளனர். இக்கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் பி.சரவணன், கே.ராகுல், கே.செந்தமிழ்செல்வன், எ.விக்னேஷ், ஆகியோர் இணைந்து
மாற்றுதிறனாளிகளுக்கான அதிநவீன மூன்று சக்கர வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில் இந்த மூன்று சக்கர வாகனமானது மாற்றுதிறனாளிகள் தரையில் அமர்ந்து கொண்டு வாகனத்தின் மீதேரும் புதிய வழிமுறைகளை இந்த வாகனத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வாகனத்தை இயக்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனை கல்லூரி முதல்வர் எ-எஸ்.அருள், துறைத் தலைவர் எம்.ஆரோக்கியஜாஸ்வின் மாணவர்களை பாராட்டினர்.
No comments
Thank you for your comments