உலகின் அனைத்து அதிசயங்களும் அமையப் பெற்ற நகரம்: குவியும் சுற்றுலாப்பயணிகள்
சீனா, ஏப்.13-
ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ஹுவாக்ஸி கிராமத்தில் உலகின் அதிசயங்களாக கருதப்படும் கட்டிடங்கள் அனைத்தையும் அதேப்போன்று உருவாக்கியுள்ளனர்.
இதனால் இந்த கிராமத்தை பார்வையிட சுற்றுலாப்பயணிகள் பெருமளவு குவிந்த வண்ணம்
இரண்டரை மைல்கள் நீளம் கொண்ட சீனப் பெருஞ்சுவர் மாதிரியை கற்களாலேயே இங்கும் அமைத்துள்ளனர். சீனப் பெருஞ்சுவருக்கு இடையிடையே காவற்கோபுரங்கள் இருப்பது போன்று இங்கும் அமைத்துள்ளனர்.
இந்த சிறப்பு நகரத்தை பராமரிக்கும் பொருட்டு இங்கு 2000 பேர் அதிகாரபூர்வமாக பதிவு செய்த குடிமக்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தலா 173,844 பவுண்டு வங்கியில் இருப்பு உள்ளதால் சீனாவில் மிகவும் பணக்கார கிராமமாக ஹுவாக்ஸி கருதப்படுகிறது.
இங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு கல்வி, மருத்துவ சேவை, குடியிருக்க வீடு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் அனைவரும் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் வாரத்திற்கு ஏழு நாளும் பணிக்கு செல்ல வேண்டும்.
இங்குள்ள குடிமக்கள் அனைவருக்கும் தனித்தனியாக குடியிருப்புகள் அளிக்கப்பட்டிருந்தும் 52 மாடிகள் கொண்ட புதிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றையும் இங்குள்ள நிர்வாகிகள் கட்டி முடித்துள்ளனர்.
இந்த கிராமத்தை பொறுத்தமட்டில் கட்டி முடிக்கப்படும் அனைத்து கட்டிடங்களும் உலகின் பல பகுதியில் அமைந்துள்ள மாதிரிகளே என்பது இதன் சிறப்பு.
No comments
Thank you for your comments