Breaking News

பெண்கள் ஜீன்ஸ் அணியத் தடை!

உ.பி, ஏப்.13-
உத்தரப் பிரதேசத்தில் பாவ்லி என்னும் கிராமம் உள்ளது. இங்கு பெண் ஒருவரே பஞ்சாயத்து தலைவராக உள்ளார். 

இந் நிலையில், அந்த பஞ்சாயத்து பெண் கணவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தபோது, 

எங்களது கிராமத்தில் பெண்கள் ஜீன்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே, பெண்கள் இறுக்கமான ஆடைகளையும் அணிய தடை
விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டை மீறி ஜீன்ஸ் அணியும் பெண்களையும், அவர்களது குடும்பங்களையும் கிராமத்தை விட்டு தள்ளி வைக்கப்படும். 

மேலும், இந்த உத்தரவுகளை பின்பற்றாத குடும்பங்கள் ஊரைவிட்டு தள்ளி வைக்கப்படுவர். 

அவர்களது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கூட கிராம மக்கள் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

பெண்களுக்கு எதிரான இந்த விவகாரம் உத்தரப்பிரதேசத்தை மட்டுமன்றி , இந்தியாவையே உலுக்குவதாக அமையும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments

Thank you for your comments