Breaking News

சென்னை விமானநிலையத்தில் அமெரிக்க கரன்சிகள் பறிமுதல்

சென்னை, ஏப்.20-
சென்னை விமானநிலையத்தில் 37 லட்சம் மதிப்புள்ள யுரோ, அமெரிக்க கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 2 பேர் கொழும்பு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களை சோதனை
செய்துள்ளனர். அப்போது சூட்கேசிஸ் துணிகளுக்குள் 37 லட்சம் மதிப்புள்ள யுரோ, அமெரிக்க கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். இவற்றை கொடுத்து அனுப்பியது யார்? யாருக்கு அனுப்பினார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments