Breaking News

​நாளை மறுநாள் முதல் வேட்புமனு தாக்கல்

சென்னை, ஏப்.20-
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் முதல் தொடங்குகிறது.

காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்துள்ளார். தொகுதிக்கு ஒரு இடம் என்ற கணக்கில், மொத்தம்
234 தொகுதிகளிலும் உள்ள மண்டல அலுவலகங்களில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

சனிக்கிழமை நாளிலும் வேட்பு மனுக்கள் வாங்கப்படும் என்றும், வேட்பாளர் சொத்துப்பட்டியல் 24 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணைய இணையத்தில் பதிவிடப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

No comments

Thank you for your comments