அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்: ஹிலாரி, டிரம்ப் வெற்றி
நியுயார்க், ஏப்.20-
நியுயார்க் மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான
தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஹிலாரியும் குடியரசு கட்சியின் டிரம்பும்
வெற்றிபெற்றுள்ளனர்.இதன் மூலம் அதிபர் தேர்தலில் டொனால்ட்
இதில் போட்டியிடும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நியுயார்கில் நடைபெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 65 சதவிகித வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இதேபோல், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் ஆவதற்கு 2,383 பிரதிநிதிகளின் வாக்குகள் பெற வேண்டும். இதுவரை நடைபெற்றுள்ள தேர்தலில் 1307 வாக்குகளை பெற்று, ஹிலாரி கிளிண்டன் முன்னிலை வகிக்கிறார்.
குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தகுதிபெற 1237 வாக்குகள் தேவை என்ற நிலையில், டொனால்டு டிரம்ப் 743 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
No comments
Thank you for your comments