Breaking News

ஓட்டுப் போட பணம் அளித்தவர்களுக்கு சிறை தண்டனை

மதுரை, ஏப்.21-
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுபோட பணம் கொடுத்த குற்றவாளிகளுக்கு திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மறவன்குளத்தில், கடந்த 2011அம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் வரதன் என்பவரை
ஆதரித்து, மதுராபேக்கரி தோட்டத்தில் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முருகேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில், பாலும் குமார், தவமணி, கார்த்திக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில், நேற்று நடைபெற்ற விசாரணையில் கார்த்திக், தவமணி, பாலு ஆகியோருக்கு ஓராண்டு சிறை தண்டையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் குமார் மட்டும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

No comments

Thank you for your comments