Breaking News

கோவையில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பறிமுதல்

கோவை, ஏப்.21-
கோவையில், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை காந்திபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில்  இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு சென்ற
கர்நாடக மாநில அரசு பேருந்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

பயணிகளின் உடமைகளை சோதனையிட்ட போது, 3 டிராவல் பேக்குகளில் ஒரு கோடியே 35 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. பணத்தை கொண்டு வந்த தன்லப் மற்றும் அஸ்ரப் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்ட போது, முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், பணத்தை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.

10 லட்சத்துக்கு மேல் ஆவணங்கள் இன்றி பணம் பறிமுதல் செய்தால், வருமான வரித்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருப்பதால், கைப்பற்றப்பட்ட பணத்தை வருமான வரித்துறையில் ஓப்படைக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments