Breaking News

இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்து - வாலிபர் பலி

உளுந்தூர்பேட்டை, ஏப்.12-
உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்தார் .

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ஏழுமலை (25) தனியார் பால் பண்ணையில் வேலை செய்து வரும் இவர் வழக்கம் போல் செவவாய்க்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். சுங்கச்சாவடி அருகே வரும் போது பின்னால் வந்த
ஒரு கண்டெய்னர் லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்தக்காயம் அடைந்த ஏழுமலை உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் விரைந்து சென்று ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments