Breaking News

எல்லையில் தமிழக “டாஸ்மாக்” - அகற்றக் கோரி கேரளப் பெண்கள் சாலைமறியல்

கோவை, ஏப்.12-
Kerala women riot for TASMAC in Anaikattiதமிழகத்தில் அமைந்துள்ள கேரளாவின் எல்லையான ஆனைக்கட்டி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி அப்பகுதி பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தின் மேற்கு ஓரமாக தமிழகம் மற்றும் கேரளா எல்லையான ஆனைகட்டி அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தின் "டாஸ்மாக்" மதுபானக்கடை உள்ளது. இந்த டாஸ்மாக் கடைக்கு கேரளப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் வந்து மது அருந்துகின்றனர்.

இதனால் தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறி டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கேரளப் பகுதி பெண்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பெண்கள் தமிழகப் பகுதிக்குள் நுழைந்து டாஸ்மாக் கடையை நேற்று முற்றுகையிட முயன்றனர்.

அவர்களை கேரள போலீஸார் தடுத்து நிறுத்தினர். அதைக் கண்டித்து இப்பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கேரள மாநிலத்தை சோலையூர் காவல் ஆய்வாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட்டவில்லை.

அதையடுத்து போலீஸார் 12 பெண்களை கைது செய்தனர். அதன் பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இதன் காரணமாக தமிழக எல்லையில் துடியலூர் ஆய்வாளர் வெற்றிவேந்தன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பினைத் தீவிரமாக்கியுள்ளனர்.

No comments

Thank you for your comments