Breaking News

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை

உளுந்தூர்பேட்டை, ஏப்.12-
உளுந்தூர்பேட்டை அருகே கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த திருவெண்ணைநல்லூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகள் தமிழரசி (19), அங்குள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ., இரண்டாமாண்டு ஆங்கிலம் படித்து வரும் தமிழரசிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வலி அளவுக்கு அதிகமாக
ஏற்பட்டதையடுத்து வலியை தாங்கமுடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்த தமிழரசியை அவரது உறவினர்கள் கொண்டு சென்று விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது ஆனால் சிகிச்சை பலனின்றி தமிழரசி திங்கட்கிழமை இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த திருவெண்ணைநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments