Breaking News

சாலையில் சிதறிக் கிடந்த 30 கோடி: முசிறியில் பரபரப்பு

திருச்சி, ஏப்.25-
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வேன் ஒன்று கவிழ்ந்து விழுந்ததில் அதிலிருந்து பணப்பெட்டி சாலையில் சிதறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முசிறிக்கு அருகே உள்ள அய்யம்பாளையம் என்ற கிராமத்திற்கு அருகே சற்று முன்னர் வேன் ஒன்று
சென்றுக்கொண்டு இருந்துள்ளது.

அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் சாலையில் கவிழ்ந்துள்ளது.

வேன் கவிழ்ந்த அதே நேரத்தில் உள்ளே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 14 பெட்டிகளும் சாலையில் சிதறி விழுந்துள்ளது.

இது குறித்து சம்பவ இடத்திற்கு உடனடியாக பொலிசார் விரைந்து சென்று விசாரணை செய்தபோது, முசிறியில் இருந்து ஸ்டேட் வங்கி அரியலூருக்கு 30 கோடி ரூபாய் பணம் கொண்டு சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

சாலையில் 30 கோடி ரூபாய் பணம் பெட்டிகளுடன் சிதறிக்கிடந்த சம்பவம் அய்யம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments