நாகை, ஏப்.25-

நாகை மாவட்டம் வேதாரண்யம் கிழக்கு கடற்கரை சாலையில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 1. 48 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலங்குடி பாலம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கொல்லத்திலிருந்து காரைக்கால்
செல்லும் தனியார் ஆம்னி பேருந்தை சோதனையிட்டனர். அதில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த மால்ராஜன் மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோரை சோதனையிட்டபோது அவர்களிடம் பணம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments