Breaking News

சூலூர் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை, ஏப்.25-
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு வீரர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரவீன் என்பவர்
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் இன்று காலை விமானப்படை தளத்தின் 2வது கேட்டில் பிரவீன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது உடல் விமானப்படை தளத்தில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா என பொலிசர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments