சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
சென்னையில் வெயில் அளவு நேற்று 107 டிகிரியை எட்டிது, வெப்பக்காற்று வீசுவதால் மேலும் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம்
அதிகரித்துள்ளது. வேலூர், சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரிக்கு மேல் இருந்த வருகிறது.கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம்
சென்னையைப் பொருத்தவரை நேற்று முன்தினம் வரை 100 டிகிரியை ஒட்டியே வெப்பத்தின் அளவு இருந்தது.
இந்நிலையில், நேற்று வெயிலின் கொடுமை சென்னையில் திடீரென அதிகரித்தது.
நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 105.44 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 107.24 டிகிரியும் வெயில் பதிவானது.
தமிழகத்தில் அதிக அளவாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 109.4 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அனல் காற்று வீசுவதால் சென்னையில் நண்பகலில் அதிக வெப்பத்தை உணர முடிந்தது.
இந்நிலையில், சென்னையில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது,
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-
அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வெப்பக்காற்று மேற்கிலிருந்து தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் வீச உள்ளது.
அதன் காரணமாக 2 அல்லது 3 செல்சியஸ் (3.6 முதல் 5.4 டிகிரி வரை) வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்.
வழக்கமாக கடல்காற்று பகல் 2.30 மணி அளவில் தரையை நோக்கி வீசத்தொடங்கும். அப்படி வீசினால் வெப்பம் குறையும்.
வறண்ட வெப்பக்காற்று மேற்கில் இருந்து வீசுவதால் கடல் காற்று வீசுவது தாமதமாகும். எனவே இந்த 2 நாட்களும் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்க்கலாம். இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments