ஒடிசாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை 72 பேர் பலி
பூரி, ஏப்.23-
வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், தென் இந்தியாவின் சில
பகுதிகளிலும் வெப்பம்
வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டது. இந்த அதிகபட்ச
வெயிலுக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் 100க்கும் அதிகமானோர்
பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் கடுமையான வெயிலின் காரணமாக இதுவரை 72
பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒடிசா மாநிலம் முழுவதும் மே 26-தேதி வரை
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதிய உணவு மட்டும் வழங்க
பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கோடை வெயிலின் தாக்கம் மே மாதங்களில் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015ல் எல்-நினோ உருவானதால் இந்த ஆண்டு கோடை வெப்பம் கடுமையாக
இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக எல்-நினோவுக்கு அடுத்து
வரும் ஆண்டுகளில் கோடை வெப்பம் அதிக அளவில் இருக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments