ஐபிஎல் கிரிக்கெட்: புனே அணியை வீழ்த்தியது பெங்களூரு
புனே, ஏப்.23-
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் புனே அணியை பெங்களூரு அணி 13 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
புனேவில் நடந்த இப்போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. பெங்களூரு அணி 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க வீரர் கே.எல்.ராஹுல் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி
அதிரடியாக விளையாடி 3 ஆவது விக்கெட்டுக்கு 156 ரன்கள் குவித்தனர். டிவில்லியர்ஸ் 46 பந்துகளில் 83 ரன்கள் விளாசித்தள்ள, கேப்டன் கோலி 63 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.புனேவில் நடந்த இப்போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட் செய்தது. பெங்களூரு அணி 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தொடக்க வீரர் கே.எல்.ராஹுல் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஏ.பி.டிவில்லியர்ஸ், விராட் கோஹ்லி
இறுதியில் பெங்களூரு அணி 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. புனே அணியில் திசாரா பெரேரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
186 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய புனே அணி 20 ஓவர்களின் முடிவில் 172 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக ரஹானே 60 ரன்கள் எடுத்தார். பிறகு தோனி 41 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியின் கேன் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
No comments
Thank you for your comments